நினைவாயுதம் கண்காட்சி யாழ். பல்கலையில் ஆரம்பம்..!!!


நினைவாயுதம் என்கிற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுகள் கண்காட்சி தமிழினப்படுகொலை வரலாறாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பிரதான வளாகத்தில் (கைலாசபதி அரங்கு அருகே) நேற்று 14.05.2025 புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

18.05.2025 ஞாயிற்றுக் கிழமை வரை இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சியில் மாணவர்கள், பொதுமக்கள், ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று இனப்படுகொலை வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரான தயாபரன் லஜிதர், எமது மக்கள் பட்ட வலிகளையும், துன்பங்களையும் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்கிற நோக்கில் மிகப்பெரிய பொறுப்பொன்றை யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமாக நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம். முக்கியமாக பாடசாலை மாணவர்களிடத்தில் எங்கள் துயரம் தோய்ந்த வரலாறு கடத்தப்படுவது அவசியமானது.  
Previous Post Next Post


Put your ad code here