மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். யாரை கண்டு பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் உங்களுடைய பேச்சு, பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவித்து விடும். நேர்மை நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். இறைவழிபாடு மனதிற்கு நன்மையை கொடுக்கும். குறிப்பாக வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு வேலையை துவங்குங்கள். பிரம்மாண்ட வெற்றியை அடைவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புகழ் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்து உயரும். நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கும். மன நிம்மதியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். மன அமைதி ஏற்படும். நீண்ட நாட்களுக்கு பிறகு வாங்கிய ஒரு கடனை திருப்பிக் கொடுக்க நல்ல சந்தர்ப்பங்கள் கைக்கூடி வரும். வேலையில் சின்ன சின்ன முன்னேற்றங்கள் காணப்படும். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதல் முயற்சிகளை போட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்கும். சோம்பேறித்தனத்தோடு இருந்தால் அதற்கு உண்டான தண்டனை நிச்சயம் கிடைக்கும். இன்றைய தினம் சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுக்காதீங்க. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் சோர்வு இருக்கும். தேவையற்ற டென்ஷன் கொஞ்சம் வந்து போகும். எந்த வேலையிலும் முழு ஆர்வத்தை காட்ட முடியாது. இதனால் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களோடு மனஸ்தாபம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசி காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் குறையும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். டார்கெட்டை சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தை பொருத்தவரை புதிய பாட்னர், புதிய முதலீடுகளை செய்யலாம். நிச்சயம் நல்ல லாபகரமான அமைப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் தானாக விளகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். காலை முதலே உங்களுடைய வேலை சரியான நேரத்தில் துவங்கிவிடும். மாலை, வேலைகளை முடிக்கும் போது ஒரு மன திருப்தியும் இருக்கும். வியாபாரத்தில் புது முடிவுகளை எடுக்கலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். கணக்கு வழக்குகளை மட்டும் கொஞ்சம் கவனமாக சரி பார்க்கவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த தேவையற்ற சண்டை சச்சரவுகள் பகை உருவாக வாய்ப்பு உள்ளது. எந்த இடத்திலும் அனாவசியமாக பேசாதீர்கள். வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். நிதானம் தேவை. அமைதி தேவை. முன்கோபம் கூடவே கூடாது. எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். தயவு செய்து யாரையும் விலக்கி வைக்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமான பொருட்களை முந்தைய நாலே பர்ஸில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை இன்று மறக்க வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேலை வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் கையை வந்து சேரும். அதை பிரயோஜனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மனைவியிடம் எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டாம். கணவனிடம் எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டாம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முடிவு எடுக்கும் போது கூடுதல் கவனம் தேவை.
Tags:
Rasi Palan