மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் வாழ்க்கையில் ஏற்படும். வேலையில் நீங்கள் செய்யும் சின்ன சின்ன திறமையான விஷயங்கள் கூட, உங்களுக்கு பெரிய அளவில் பாராட்டை பெற்றுக் கொடுக்கும். இன்றைய நாள் மனத்திற்கு இதமான நாளாக இருக்கும். இறைவனுக்கு நன்றி செல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிதிநிலைமை சீராகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எந்த பிரச்சினையை கண்டும் மனம் துவண்டு போக மாட்டீர்கள். தைரியமாக செயல்படுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு உதாரணமாக திகழப் போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னோக்கி செல்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுகள் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசி காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. காதல் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். வேலை வியாபாரத்தை பொருத்தவரை எப்போதும் போல நல்லபடியாக செல்லும். பிரச்சனை கிடையாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களால் இயன்ற அளவு அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பீங்க. மனநிம்மதி அடைவீர்கள். உங்கள் வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு மனநிறைவை அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தை வீணடிக்கக்கூடாது. சொன்ன வேலையை சொன்ன நேரத்திற்கு முடித்து தர வேண்டும். அனாவசியமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளை தள்ளி போடுங்கள். வேலை வியாபாரம் பிள்ளைகள் அம்மா அப்பா என்று எல்லா இடத்திலிருந்தும் சின்ன சின்ன எதிர்ப்புகள் வர வாய்ப்புகள் உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தக்க சமயத்தில், தக்க இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்களுடைய குழப்பமான நிலை தீரும். அடுத்தவர்களுடைய ஆலோசனை உங்கள் மனதிற்கு ஒரு நிம்மதியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்யுங்கள். மனதில் இருக்கும் பாரத்தை கொட்டி தீர்த்து விடுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் சலனப்படும். பேராசை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்களை பார்த்து சில பேருக்கு பொறாமை கூட வரலாம். எதுவாக இருந்தாலும் சரி, இன்று எந்த ஒரு புதிய முடிவையும் எடுக்க வேண்டாம். அனாவசியமாக பணத்தை செலவு செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத விஷயத்தில் அகல கால் வைக்க வேண்டாம். ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களுடைய வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். இன்று மாலை நேரத்தில் மகிழ்ச்சியோடு குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. என்ஜாய் பண்ணுங்க.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். அகல கால் வைக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை இன்று யாரிடமும் கடன் வாங்காதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தேவையில்லாத நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
Tags:
Rasi Palan