வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!!!


இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன் அடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெவிக்கையில் 

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கில் சேவை முடக்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து இருந்தோம்.

ஆனால் தற்போது இ.போ.சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரபபினர் இனிவருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அவைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here