யாழ்ப்பாணம் - நெடுந்தீவுபகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.
இதில் நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 15 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் 16ஆம் திகதி நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, நேற்று 17ஆம் திகதி அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக் காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.