யாழில். புகையிரத விபத்து - ஆலய குருக்கள் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பான புகையிரத கடவையில் புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த போதிலும் , துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்டு புகையிரதத்துடன் மோதி படுகாயமடைந்திருந்தார்.

சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here