பூண்டுலோயா டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இத் தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
ஆனால், உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த லயன் குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்களின் ஒத்தழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் களத்தில் நின்றமை குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news