இன்றைய ராசிபலன் - 26.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எல்லா விஷயத்திலும் லாபத்தை எதிர்பார்ப்பீர்கள். லாபம் இல்லாமல் சின்ன தூசியை கூட நகர்த்த மாட்டீர்கள். இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்தையும் கைநிறைய லாபம் கிடைக்கும் நாள். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த எதிரி தொல்லை விலகும். மன நிம்மதி அடைவீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருந்த அத்தனை இடையூறுகளும் சரியாகிவிடும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன உறுதியோடு செயல்பட வேண்டும். எந்த விஷயத்திற்கும் பயப்படக்கூடாது. குறிப்பாக தோல்வியை கண்டு அஞ்ச கூடாது. போராடி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடத்தில் இருந்தால் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்களுடைய வேலையில் நண்பர்கள் கூட பிரச்சினையாக மாறலாம். எதுவாக இருந்தாலும் சமாளிக்கும் தைரியம் உங்களிடத்தில் தேவை. மனம் சோர்வடையாதீர்கள். இதுவும் கடந்து போகும் என்று நினைத்தாலே போதும். இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த பெரிய மனிதர்களை சந்திக்கலாம். நல்ல செய்தி உண்டு.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். யாரெல்லாம் உங்களை அவமானப்படுத்தினார்களோ, அவர்கள் எல்லாம், தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு அன்னார்ந உயரத்தில் நீங்கள் இருப்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும் இரவு நல்ல தூக்கத்தை பெறலாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் மீது எந்த தவறும் இல்லாத பட்சத்தில் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டாம். தைரியத்தோடு செயல்படுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். கடவுளின் துணை உங்களுக்கு இருக்கிறது.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று புதிய வேலைகளை துவங்குவதற்கு நல்ல நாளாக இருக்கப் போகிறது. வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்களை மீண்டும் துவங்கலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யலாம். அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்ற, என்னென்ன உங்களால் உதவி செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யுங்க. உங்களுடைய வாழ்க்கையில் இறைவன் விளக்கேற்றி வைப்பான்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த உறவுகள் நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேரும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி கிடைக்கும். கொஞ்சம் உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வேலைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உங்கள் கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். தேவையற்ற எதிரிகளிடமிருந்து நீங்களே விலகி நிற்பீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் சிக்கல்கள் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கடவுள் உங்களுக்கு இன்று சோதனையை கொடுக்கப் போகின்றான். ஆனால் நிச்சயம் கைவிடமாட்டான். சோதனையில் ஜெய்ப்பதற்கு நேர்மையும் விடாமுயற்சியும் கட்டாயம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல உபசரனை இருக்கும். வருமானம் இருக்கும். ராஜாவைப் போல வாழ போகிறீர்கள். இந்த நாளை என்ஜாய் பண்ணுங்கள். மனைவி குழந்தை என்று நேரத்தை செலவு செய்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் வரும். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.
Previous Post Next Post


Put your ad code here