இன்றைய ராசிபலன் - 14.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் துன்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். குடும்ப சண்டைகள் தீரும். நிதி நிலைமை சீர்படும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடன் வசூல் ஆகும். நல்லது நடக்கும் நாள். நீண்ட தூர பயணங்களில் மூலம் உற்சாகம் பிறக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் பெற்றவர்களிடம் எந்த ஒரு பர்மிஷன் கேட்க வேண்டாம். முக்கியமாக உங்கள் காதல் விஷயங்களை வீட்டில் சொல்லாதீங்க. தேவையற்ற எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது இறை வழிபாட்டில் ஈடுபடும். சந்தோஷம் பிறக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று பெரிய அளவில் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. தேவையற்ற ஏமாற்றங்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம். வேலையிலும் நிதானம் தேவை. மேலதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் கூட இன்று கொஞ்சம் பொறுமை காக்கவும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் தெளிவாக சிந்திப்பீர்கள். எதிரிகள் தொல்லைகளுக்கு சரியான பதிலடி கொடுப்பீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் வந்து சேரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் சீராகும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் செய்து தர முடியாத சூழ்நிலை உண்டாகலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். அவசரப்படக்கூடாது, முன் கோபமும் வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். எந்த முக்கியமான விஷயத்தையும் மறந்து போய்விடக்கூடாது. முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பர் பேனா எடுத்து வைத்து குறித்து வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமான மீட்டிங் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களில் போதும் கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாது. கொஞ்சம் சோம்பேறித்தனம் இன்றைய நாளை சொதப்பலாகலாம். உஷாரா இருந்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடக்க வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உயர்ந்த மனிதரின் சந்திப்பு மன நிம்மதியை கொடுக்கும். நீங்களும் செல்வாக்கு நிறைந்தவர்களாக மாறுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலையில் பிரமோஷன் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இன்று முன்னேற்றம் தரும் நாளாக அமையும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்டெடுத்து, மன நிம்மதி அடைவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்களை வீழ்த்துவதற்கு இரண்டு பேர் சதி செய்ய காத்துக் கொண்டிருப்பார்கள். வேலை செய்யும் இடத்திலும் வியாபாரத்திலும், கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களை வெளியில் சொல்லாதீங்க.
Previous Post Next Post


Put your ad code here