யாழில். மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற குற்றத்தில் இளைஞன் கைது..!!!


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞனின் வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது, 20 போதை மாத்திரைகள், 12கிராம் 370 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளும், 61 கிராம் கஞ்சா போதைப்பொருளையும் கூரிய வாளொன்றையும பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்து வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here