
இலங்கையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு தேவையான போதைப்பொருள் கையிருப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது பிரதி அமைச்சர் டி.பி சரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாட்டுக்கு போதைப்பொருள் கொண்டு வரப்படும் அனைத்து வழிகளும் நிறுத்தப்பட்டாலும் இன்னமும் பத்து ஆண்டுகளுக்கு தேவையான போதைப்பொருள் கையிருப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வளவு பாரிய தொகை போதை பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவு போதைப்பொருட்கள் மண்ணுக்குள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கலன்களின் ஊடாக பெருந்தொகை போதைப் பொருட்கள் களஞ்சிய படுத்தப்பட்டுள்ளதாகவும் இது நாட்டுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
sri lanka news