வாகனங்களின் விலைகள் குறையும் சாத்தியம் – மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!!!



புதிய வாகன விற்பனையில் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, பதிவு செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை இந்த நாட்களில் குறைந்து வருகின்றன.

அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், முதல் முறையாக வாகனம் வாங்குபவர்களும், கூடுதல் வாகனம் வாங்க விரும்புபவர்களும் பதிவு செய்யப்படாத, அதாவது புதிய வாகனங்களை வாங்க அதிகளவில் ஆசைப்படுவதாக வாகனங்களை கொள்வனவு செய்பவர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களையே விரும்புகின்றனர். இந்தப் போக்குக்கான முக்கிய காரணங்கள், சந்தையில் பல மலிவு விலை மின்சார வாகன மாதிரிகள் கிடைப்பதும், இந்த வாகனங்களின் சிறிய அளவும், ஒரே சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் திறன் ஆகியவையும் ஆகும்.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை இல்லாததால், தற்போது அதிக விலைக்கு விற்பனையாகும் பயன்படுத்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் எதிர்காலத்தில் கணிசமாகக் குறையும் என்று சந்தை வட்டாரங்கள் மேலும் கணித்துள்ளன.
Previous Post Next Post


Put your ad code here