யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் , இரட்டை குழந்தைகளும் உயிரிழந்திருந்தன. அந்நிலையில் தாயார் தீவிர சிகிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயாரும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த தாயாரே(வயது 28) உயிரிழந்துள்ளார்.
தாயாரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது