இன்றைய ராசிபலன் - 05.10.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். தேவையற்ற டென்ஷன் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. பழைய ஞாபகங்கள் கொஞ்சம் அசைபோடும். நேரம் வீணாகும். தேவையற்ற செலவுகள் வந்து கொஞ்சம் பிரச்சனை தரும். பாத்துக்கோங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். தேவையற்ற மன பயம் வேண்டாம். உங்களுடைய கடமையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக இருங்கள். யாராலும் உங்களை அசைக்க முடியாது. பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்கவும். நீங்களாக தன்னிச்சையாக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். விடுமுறை நாளாக இருந்தாலும், உங்களுடைய பொறுப்புகளை, கடமைகளை முதலில் நிறைவேற்றி விடுங்கள். பிறகு ஓய்வு எடுக்கலாம். பிறகு ஊர் சுற்றலாம். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். நல்லது நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் கொஞ்சம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். விடுமுறை நாள் என்று பாராமல் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் விருந்தளிகளின் வருகை சுப செலவு, அலைச்சல்கள் எல்லாம் தலை மேல் பாரமாக வந்துவிடும் பார்த்துக்கோங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல நேரம் கைக்கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பதற்கு நல்ல செய்தி உண்டு. விவசாயிகள் கைநிறையலாபத்தை எடுப்பீர்கள். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்களுக்கு இன்று கல்லா கட்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிம்மதி கிடைக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனக்குழப்பம் அதிகமாக இருக்கும். தெளிவான முடிவை எடுப்பதற்கு இன்று தோதான நாள் கிடையாது. எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. அவசரம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களே பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் வேண்டாம். அனுசரணை இருந்தால் பிரச்சனைகள் பெருசாக இருக்கும். வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யாதீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும் நாள். குடும்பத்தில் அனுசரணையுடன் நடந்து கொள்வீர்கள். மனைவிக்கு உதவி செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிறைவான நாள் இன்று.
Previous Post Next Post


Put your ad code here