மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றிவாகை சுடக்கூடிய நாள். இன்று அம்மன் வழிபாடு செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. நீண்ட நாள் வழக்குகளிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்கள் மீது விழுந்த பழி விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும் எதிலும் மன தெளிவோடு செயல்படுவீர்கள். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிக நாட்டம் இருக்கும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இறை வழிபாட்டினால் நம்பிக்கை அதிகரிக்கும். துன்பங்கள் விலகும் நாள். வேலையும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தோடு சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கமும் சாப்பாடும் மட்டும்தான் உங்களுக்கு இப்போது தேவை. மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. தேவையற்ற கோபத்தால் பிரச்சனைகள் வரும்வாய்ப்பு உள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை எஇன்று சில பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலையில் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். நிதானமாக இருங்க. அனுபவசாலிகள் சொல் பேச்சைக் கேட்டு நடந்தால் பிரச்சனை இல்லை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் பணிவு அடக்கம் தேவை. ஆர்பாட்டம் கூடாது. அனாவசிய பேச்சு வேண்டாம். முன் கோபம் வேண்டாம். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். சொர்க்கமான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். நிதி நிலைமை சீராகும். பண்டிகைக்குத் தேவையான பொருட்களை இன்றிலிருந்து வாங்க துவங்கி விடுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். உங்களுடைய பிரச்சனைக்கு நாலு பேர் வந்து உதவி செய்வார்கள். வருமானத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். பக்கத்தில் வந்த பணம், கையை வந்து சேர முடியாத சூழ்நிலை உண்டாகும். இன்ற பௌர்ணமி. அம்மன் கோவிலுக்கு போங்க நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற மனக்கவலை இருக்கும். கொஞ்சம் டென்ஷன் இருக்கும். உடல் அசதி அதிகமாக இருக்கும். வேலை பளுவை சமாளிக்கவே முடியாது. இருந்தாலும் கடமைகளை தள்ளி வைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள் எதிரிகள் தொல்லை இருக்காது. முதலீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது. வியாபாரத்தை விரிவு செய்யலாம். நல்லது நடக்கும் நாள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும் நாள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக அமையும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கு.
Tags:
Rasi Palan