யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்தார்.
வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவருக்கும் பொருள் கொள்வனவுக்காக வருகைதந்த இருவருக்கும் இடையில் நேற்றிரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதையடுத்து குறித்த இருவரும் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் சுன்னாக பொலிஸார் அவர்களைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.