மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்த வாரமாக இருக்கும். நெருக்கடியான பலவிதமான கஷ்டத்திலிருந்து சுலபமாக வெளி வருவீர்கள். வேலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மன நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் இழந்த பணம், சொத்து, உங்கள் மரியாதையை திரும்பவும் கடவுள் உங்களுக்கே மீட்டுக் கொடுப்பார். இந்த வாரம் எல்லா நன்மையும் தேடி வரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். பசு மாட்டிற்கு வாழைப்பழம் கொடுங்கள் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்த வேலை எல்லாம் நினைத்தபடி நல்ல படியாக நடக்கும். சுறுசுறுப்பாக இருப்பிங்க. நல்ல பெயர் வாங்குவீங்க. யாராலும் செய்ய முடியாத கஷ்டமான விஷயங்களை கூட நீங்கள் செய்து சாதனை படைப்பீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் கோட்டை விட வாய்ப்புகள் உள்ளது. நேரத்திற்கு சாப்பிடவும். நேரத்திற்கு தூங்கவும். ஆரோக்கியம் இல்லாத உணவை தவிர்ப்பது ரொம்ப ரொம்ப அவசியம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக முடியும். காரியத்தடை விளக்கும். தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள். இரண்டு ஏழை குழந்தைகளுக்கு இரண்டு நோட்டு, இரண்டு பென்சில் தானம் கொடுங்கள். நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடக்கும். வீட்டில் சுபகாரிய தடை விலகும். புது நண்பர்களின் அறிமுகம், புது நண்பர்களின் நட்பு உங்களுக்கு ஆதரவாக இருக்கும். கொஞ்சம் பிரபல்யமானவர்களின் நட்பும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள அந்த நட்பு நல்லதை செய்யும். வாழ்த்துக்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முதன்மையிடத்தை பிடிப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். பண்டிகையை கொண்டாடுவதற்கு வீட்டில் இருக்கும் பெண்கள் தயாராக துவங்கி விடுபீர்கள். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வணங்குங்கள். சிவப்பு நிற வாழைப்பழம் வாங்கி 2 யாசகர்களுக்கு தானம் கொடுங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட தூங்குவதற்கு கூட நேரம் இருக்காது. இருந்தாலும் உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பீர்கள். நேர நெருக்கடி கொஞ்சம் அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட வேகமாக ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் நாளை என்று தள்ளிப் போடாதீர்கள். முடியாத வேலைக்கு முடியாது என்று சொல்லுங்கள். முடிந்த வேலைகளுக்கு மட்டும் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை கட்டி போடுவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கும். எல்லா வேலைகளும் சரியாக நடக்கும். ஆனாலும் இந்த மன குழப்பத்திலிருந்து உங்களால் வெளிவர முடியாது. எதற்காகத்தான் சிந்திக்கிறோம் என்று தெரியாமல், ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். அதனால் கொஞ்சம் நேரத்தை வீண் விரயமாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனக் குறைவினால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனக்குழப்பத்திலிருந்து நீங்கள் வெடிபட வேண்டும். திங்கட்கிழமை விநாயகரை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேகமாக செயல்படுவீர்கள். உங்களை பின்தொடர கூட யாராலும் முடியாது. அந்த அளவுக்கு பம்பரம் போல சுழன்று கொண்டே இருப்பீர்கள். ஒரு பக்கம் நிற்க மாட்டீங்க. உங்களுடைய மனசும் சரி உடம்பும் சரி நிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் நிறைய வெற்றி பயணங்களை சந்திப்பீர்கள். புது அனுபவங்கள் கிடைக்கும். பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களை பார்க்கும் போதே அனைவருக்கும் பிடிக்கும். ஒரு வசீகரத் தோற்றத்தோடு வளம் பெற போறீங்க. பேச்சாற்றலும் வெளிப்படும். குறிப்பாக வழக்கறிஞர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள், மீடியா துறையில் இருப்பவர்கள் இந்த வாரம் சக்சஸ் பண்ணுவீங்க. வியாழக்கிழமை நரசிம்மர் வழிபாடு செய்யுங்க கண் திருஷ்டி நீங்கிவிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் எல்லா விஷயத்திற்கும் அவசரப்படுவீர்கள். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு பஞ்சாயத்து செய்து வைப்பீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளை நீங்களே இழுத்து உங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்வீர்கள். உங்களுடைய நிதானம் இல்லாத போக்கு, பெரிய பெரிய பிரச்சனைகளை எல்லாம் கொண்டு வந்து சேர்க்க வாய்ப்புகள் உள்ளது. அதிரி புதிதாக எந்த முடிவும் எடுக்காதீங்க. அனுபவசாலிகளை கூடவே வைத்துக் கொள்ளுங்கள். பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் விவேகம் இல்லாமல் செயல்படக் கூடாது. தினமும் சிவன் கோவிலில் பத்து நிமிஷமாவது தியானம் செய்யுங்கள். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சுடக்கூடிய வாரமாக தான் இருக்கும். வருமானத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆனால் வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷனாக இருக்காதீங்க. எதிரிகள் தொல்லை கொடுத்தாலும் அமைதி நிலை மாறாமல் இருப்பது நல்லது. சனிக்கிழமை பைரவர் வழிபாடு செய்யுங்கள் எதிரி தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் சந்தோஷமாகத்தான் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நிதி நிலைமை சீராகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். ஆனால் வேலை வியாபாரத்தில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். அவசரத்தோடு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. மேலதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு எதிராக போட்டி போட்டு வேலையில் சதி நடக்கவும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். சனிக்கிழமை ஹனுமன் வழிபாடு செய்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாகத் தான் இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் அந்தந்த நேரத்தில் சராசரியாக நடக்கும். வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீடுகள் செய்யலாம். பிரச்சனைகள் எதுவும் பெருசாக வராது. எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் கூட சரியாகிவிடும். ஆனால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நிறைய கைபேசி பார்க்காதீர்கள். நேரத்திற்கு தூங்குவது நல்லது. தினமும் அம்மன் வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தை இழக்கவே கூடாது. உங்களுடைய ஆயுதம் மௌனமாக மட்டும் தான் இருக்க வேண்டும். வாய் பேசக்கூடாது. சண்டை சச்சரவில் கை நீட்டக்கூடாது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அடக்கமாக இருந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் குடும்பத்தில் குழப்பங்கள் வந்துவிடும். உறவுகள் பிரிவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை. வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். நல்லது நடக்கும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தினமும் முருகர் வழிபாடு செய்யுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நடக்கும். வேண்டா வெறுப்பாக உங்களிடம் பேசியவர்கள் எல்லாம் தானாக விலகி செல்வார்கள். எதிரிகளால் உங்களோடு போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் பேச்சு உயர்ந்த நிற்கும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். திறமைகள் வெளிப்படும். உங்க டார்கெட்ட கரெக்டா அச்சீவ் பண்ணிடுவீங்க. வியாபாரத்தை பொறுத்த வரை முதலீடு மட்டும் கவனமாக இருக்க வேண்டும். புது மனிதர்களை நம்பாதீங்க. பார்ட்னர்ஷிப் போடும்போது கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன சுப செலவுகள் அவ்வப்போது வந்து போகும். நிதி நிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். சமாளிச்சுருவீங்க, கவலை இல்லை. அங்காள பரமேஸ்வரியை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
Tags:
Rasi Palan