மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். குடும்பத்தோடு பண்டிகையை மன நிறைவோடு கொண்டாடுவீர்கள். இன்று மாலை நேரத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. புதிய பகையை உண்டாக்கும் படி எந்த காரியத்தையும் அவசரப்பட்டு செஞ்சிறாதீங்க. பொறுமையாக இருங்கள். பட்டாசு வெடிக்கும் போது கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பண்டிகை நாள். சந்தோஷமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை அடையும். சுப செலவுகள் ஏற்படும். மன நிறைவோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள். நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் உறவுகளை சந்திப்பீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பண வரவு சீராகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளுடைய மன நிறைவை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட தூர பயணங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். பட்டாசு வெடிக்கும் போது கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய அளவில் பக்குவம் வெளிப்படும். மேன்மையாக நடந்து கொள்வீர்கள். அனுபவம் வெளிப்படும் நாள். அடுத்தவர்களுடைய மனதை புரிந்து கொள்வீர்கள். நல்ல பெயர் உங்களுக்கு கிடைக்கும். உறவுகள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை சந்தர்ப்பங்களை கடவுள் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பான். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவீர்கள். இந்த நாள் இறுதியில் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் நிறைய தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை அன்று பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கைநிறைய லாபம் எடுப்பீர்கள். வேலையில்லாமல் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. இந்த பண்டிகை மன நிறைவோடு கொண்டாடுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிதானத்தோடு நடந்து கொள்வீர்கள். இந்த தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்ச்சி அடைவீர்கள். இறையருள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வெரும் பண விஷயத்தில் மட்டுமல்ல. உங்களுடைய அந்தஸ்து கௌரவம் மரியாதை அனைத்துமே உயரும். பக்குவம் வெளிப்படும் நாள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் நாள். மன மகிழ்ச்சி உண்டாகும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மனைவி குழந்தை என்று பண்டிகையை சந்தோஷத்தோடு கொண்டாடி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். சுப காரியங்கள் கைகூடி வரும் நாள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும். உங்களுடைய வயதைப் பொறுத்து, மனதிற்கு பிடித்த நபரை இன்று சந்திப்பீர்கள். இளைஞர்களாக இருந்தால் நீங்கள் எதிர்கால பார்ட்னரை சந்திக்க கூட வாய்ப்பு உள்ளது. அதிஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். இன்ப அதிர்ச்சி உண்டாகும். என்ஜாய் பண்ணுங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கப் போகிறது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. பட்டாசு வெடிக்கும் போது கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெண்கள் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். எதிலும் நிதானத்தோடு இருப்பீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கடமைகளிலிருந்து பின் வாங்க மாட்டீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
Tags:
Rasi Palan