கிளிநொச்சிக்கு அழைத்து செல்லபடும் இஷாரா செவ்வந்தி..!!!


கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி விசாரணைக்காக கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிவருகின்றன .

அதன்படி சஞ்சீவ கொலைக்குப் பின்னர் அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது கிளிநொச்சி பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், ‘தக்ஷி’ என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி சுரேஷ் அந்த பெண்ணை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக விசாரணையல் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தக்ஷிக்கு தெரியாமலேயே அவர் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here