வடக்கு மாகாணத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் மாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், வவுனியா - மன்னாருக்கு இடையிலான 220 கிலோ வோட் மின்சார பரிமாற்ற வடத்தை மாற்றி யமைப்பதற்கான வேலைகள் இடம்பெறவி ருக்கின்றன. இந்நிலையில் வடமாகாணத் துக்கான 132 கிலோ வோட் வவுனியா அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது நாளை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை துண்டிக்கப்படவுள்ளது.
ஆகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்ப டும். மேலும் திருத்த வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.