இன்றைய ராசிபலன் - 02.11.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும். குலதெய்வம் ஆசிர்வாதத்தால் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். எந்தெந்த வேலைகளை எந்தெந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமோ, அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடித்துக் கொடுத்து, நல்ல பெயர் வாங்குவீங்க. வருமானம் பெறுக கூடிய நாளாக இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நண்பர்களால் நல்லது நடக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக ஒப்பந்தம் போடுவது, புது பொருட்கள் வாங்க பேச்சுவார்த்தை நடத்துவது இதுபோல விஷயங்களில் இன்று கவனம் செலுத்தலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உடல் அசதி ஏற்படும். கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க. நிறைய தண்ணீர் குடியுங்கள். வழக்கத்திற்கு மாறாக எந்த ஒரு வேலையையும் சிரமம் எடுத்துச் செய்ய வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும். மனதிற்கு அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் இரட்டிப்பாகும். எதிர்பாராத இடத்திலிருந்து படம் கையை வந்து சேரும். வாரா கடன் வசூல் ஆகும். சொத்து சேர்க்கை இருக்கிறது. வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றும் யுத்தியை கையாண்டால், இன்று உங்களை வெல்ல யாராலும் முடியாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும், உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நேர்வழியில் உங்களுடைய போக்கு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதாரணமாக திகழ்வீர்கள். குடும்ப ஒற்றுமை நிலவும். பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். புதிய முதலீடுகளை செய்ய தேவையான முயற்சிகளை எடுங்க. நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில் நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு.
Previous Post Next Post


Put your ad code here