யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் வீடு திரும்பவில்லை என தயார் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சிறுவன் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் , பெற்றோருக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்
