கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு..!!!


வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம்.

இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. அத்தோடு மயிர்க்கொட்டி தாக்கம் காரணமாக கண்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here