இன்றைய ராசிபலன் - 05.11.2025..!!!

இன்று 2025 நவம்பர் 05ம் தேதி புதன் கிழமை, சந்திர பகவான் மேஷ ராசியில் அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று பெளர்ணமி திதியும், இன்று அற்புதமான மஹா அன்னாபிஷேக தினம். புதாதித்ய யோகம் உருவாகிறது. இன்று சித்த யோகம் உள்ளது. இன்று கன்னி ராசிக்கு நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டமம் உள்ளது.

இன்று நவம்பர் 05ம் தேதி, ஐப்பசி மாதம் 19 சந்திர பகவான் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று ஐப்பசி பெளர்ணமி திதி உலகிற்கே பசியாற்றக்கூடிய மஹா அன்ன அபிஷேக தினம். துலாம் ராசியில் சுக்கிரன், சூரியன், புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இன்று சித்த யோகம் உள்ளது. கன்னி ராசியில் உள்ள உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷ ராசி பலன்

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடிய நாள். மாணவர்கள் தங்கள் கல்வியில் சில தடைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு கிடைக்கும். இன்று உங்களுடைய பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட நேரிடும். இதனால் குடும்பத்துடன் அமைதியற்ற சூழல் ஏற்படும். இன்று உங்கள் தாய் வழி சொந்தங்கள் மூலம் நிதி ஆதாயம் பெற வாய்ப்பு உண்டு. விரும்பு உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் சில மன பதற்றம் ஏற்படும். உங்கள் வேலையில் கவன சிதறல் ஏற்படக்கூடிய நாள். இதனால் கவலை அதிகரிக்கும். இது மாலை நேரத்தில் பதற்றம் நீங்குவதோடு ஆசைகள் குறையும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது, அவர்களின் ஆலோசனை உங்களுக்கு நன்மை தரக்கூடியதாகவும் அமையும். புதிய வணிக ஒப்பந்தங்கள் நீங்கள் தவிர்ப்பது நல்லது. இது உங்களுக்கு பாதகமாக அமையும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வீடு அல்லது நிலம் வாங்குதல், கடை தொடங்குதல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் வந்து சேரும். இன்று உங்கள் செல்வ நிலை அதிகரிக்கும். நிதிநிலை பலப்படக்கூடிய நாள். உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளில் நெறிமுறை இன்று செயல்களை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் சில இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையில் எதிரிகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இன்று எந்த செயலிலும் அவசரத்தை தவிர்த்து பொறுமையுடன் செயல்படவும்.

கடக ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மூத்தவர்களின் ஆலோசனை உங்களின் வேலை மற்றும் தொழில் தொடர்பாக குறிப்பிடத்தக்க நன்மைகளை தரும். வெளியூர் வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும்.இன்று உங்களுடைய சமூக வட்டம் விரிவடையும். வேலை வணிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் மாலை நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். பகுதி நேர வேலை அல்லது தொழிலை தொடங்க விரும்பினால் அது லாபகரமானதாக அமையும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் அனுகூலமும் நல்ல செய்திகளும் கிடைக்கும். இன்று உங்களுடைய நிதி சுமை குறையும். அதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சமூக தொண்டு, ஜவுளி வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு இன்று நிதி ஆதாயம் அடைவார்கள். இன்று உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் கூடுதல் கவனம் தேவை. இன்று நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். உங்களுடைய முன்னேற்றம் கண்டு பிறர் பொறாமை படக்கூடிய நாளாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். உங்களின் உறவு வலுவடையும். குடும்ப சொத்து தொடர்பான தகராறுகள் சர்ச்சைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பெண் ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய சூழ்நிலை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்று பணியிடத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் உயர் கல்விக்கான முயற்சிகளில் நல்ல செய்தி பெறுவார்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி நண்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பாக துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். உங்களின் சிந்தனை மற்றும் செயல்முறை நற்பெயரை பெற்று தரும். இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். கடந்த சில நாட்களாக பணியிடத்தில் சந்தித்து வந்த தொந்தரவுகள் நீங்கும். உங்களின் தலைமைத்துவம் மேம்படும். உங்கள் செயல்பாடுகளில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை தொடர்பான சூழ்நிலை சற்று நிலையற்ற தன்மை இருக்கும். உங்கள் மனம் அமைதியற்றதாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் உதவியால் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் இணக்கமான சூழல் இருக்கும். இன்று மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராவது மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்கள். இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். திருமண முயற்சியில் நல்ல வரன் அமையும். உங்களின் குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சரியாக நிறைவேற்றுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக புதிய விஷயங்களை செயல் படுத்த நினைப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியை நிறைந்திருக்கும். துணையிடமிருந்து பரிசு கிடைக்கலாம். இன்று உங்கள் மனதில் ஆற்றல் அதிகரிக்கும். இன்று உங்கள் வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவதில் செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்கள் வேலையில் புதிய திட்டங்கள் மற்றும் கடின உழைப்பு தேவைப்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகர ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு வேலை தொடர்பாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். மிக முக்கிய வேலையை முடிப்பதில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். இந்த சட்ட விவகாரங்களை சிறப்பாக கையாளுவீர்கள். இன்று பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. நிறைவேற்ற செலவுகள் அதிகரிக்கும். கடந்து கொடுப்பது மற்றும் வாங்குவதை தவிர்க்கவும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முயற்சி தொடர்பான விஷயத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் துணையின் ஆதரவை பெறுவீர்கள்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி நண்பர்களுக்கு இன்று உங்களுடைய உறவில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சில முக்கிய நல்ல நிகழ்வுகள் நடக்கும். உங்கள் காதலை குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அண்டை வீட்டாருடன் இனக்குமாக நடந்து கொள்ளவும். இன்று உங்கள் வேலை தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கக்கூடிய நபர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

மீன ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில் தொடர்பான போட்டிகள் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழிலை தொடங்க இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்த ஒரு முதலீடை செய்வதற்கு முன் உங்கள் துணை ஆலோசனை பெறுவது நல்லது. உங்களின் வருமானம் மற்றும் செலவுகளில் சமநிலையை கடைபிடிப்பது நல்லது. இல்லையெனில் எதிர்காலத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டுதல் நன்மை தரும். தந்தையின் ஆரோக்கியத்தையும் கவனம் தேவை.
Previous Post Next Post


Put your ad code here