இன்றைய ராசிபலன் - 11.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. முன் கோபம் கூடாது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். உங்களுடைய குழப்பங்களை பிரச்சனைகளை தீர்த்து வைக்க நாலு பேர் இருப்பாங்க. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி வாகை சுட கூடிய நாள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். வருமானம் சீராகும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி கிடைக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று சின்ன பயம் அடிமனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். எது நல்லது எது கெட்டது என்று முடிவை எடுக்க முடியாமல் தடுமாற வாய்ப்புகள் உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற நேரத்தை வீணடிக்கக்கூடாது பாத்துக்கோங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. பொறுமை தேவை. முன்கோபம் கூடாது. யாரிடமும் சண்டைக்கு போகக்கூடாது. உங்களை தேடி வீண்வம்பு வந்தால் கூட அதிலிருந்து ஒதுங்கி தான் நிற்க வேண்டும்‌‌. தேவையற்ற பகையால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. விட்டுக்கொடுத்து செல்லவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை எல்லாம் நேரத்திற்கு சரியாக நடக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். பார்ட்னரோடு புதிய ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தாலும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவாக இருக்கும். குழப்பமான பிரச்சனைகளுக்கு கூட இறுதியான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் தேவை.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரோடு பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. இறை வழிபாடு செய்யுங்கள். மன அமைதி கட்டாயம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் எடுக்கும் முடிவிலிருந்து தடுமாற மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவையில்லாமல் பிரச்சனைக்கு வருபவர்களை ஒரு கை பார்த்து விடுவீர்கள். திறமை வெளிப்படும். தைரியம் வெளிப்படும். புது அனுபவங்கள் கிடைக்கும் நாள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெருமையான நாளாக இருக்கும். யாரிடம் எல்லாம் கெட்ட பெயர் வாங்கினீங்களோ, அவங்க கிட்ட எல்லாம் நல்ல பெயர் வாங்கிடுவீங்க. குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று துடிப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவசரம் கூடாது. பெரியவர்கள் பேச்சை கேட்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. அவசரப்பட்டு நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் பிரச்சனையை உண்டு பண்ணும் ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வருமானம் சீராகும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here