இன்றைய ராசிபலன் - 19.11.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதிநிலைமை சீராகும். ஆரோக்கிய குறைபாடுகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முதலீடுகளை செய்யலாம். சேமிப்புகளை துவங்கலாம். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் செய்யும் முதலீடு, சேமிப்பு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். புதுசாக வேலை தேடுவது, புதுசா தொழில் துவங்குவது இதுபோல நல்ல காரியங்களுக்கும் இன்று பிள்ளையார் சுழி போடலாம்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிக்கலான பிரச்சனைகள் வரும். இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஆனால் தக்க சமயத்தில் தக்க நபரால் உதவிகள் கிடைத்து காப்பாற்றப்படுவீர்கள். நண்பர்கள் உறவுகளுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். மனநிம்மதி கிடைக்கும் நாள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராததை விட நிறைய நன்மைகள் நடக்கும். எப்படி தான் இதையெல்லாம் சமாளிக்க போகின்றோமோ, என்று கொஞ்சம் குழப்ப நிலையில் இருந்த உங்கள் மனது, முழுமையாக தெளிவு பெறும். எல்லா வேலையையும் சரிவர சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். நல்ல பெயரும் வாங்கி விடுவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக சிந்திப்பீர்கள். சுயநலத்தோடு சிந்திப்பீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையையும் கையில் எடுக்க மாட்டீர்கள். உங்களுடைய பேச்சுக்கு யாராலும் பதில் கொடுக்க முடியாது. திறமை வெளிப்படும் நாள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிம்மதி இருக்கும். குடும்ப ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தேவையில்லாத மன உளைச்சலில் இருந்து விடுபட்டு, இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வாராக்கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கு. தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். என்ன செய்யப் போகின்றோமோ என்று திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் கூட இன்று கடவுள் ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுப்பான்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிகமாக பேசக்கூடாது. நிதானம் தான் இன்று உங்களுக்கான நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். இறைவழிபாடு செய்யுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம். சோசியல் மீடியாவில் அதிக நேரம் இருக்காதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். அடுத்தவர்களை குறை சொல்லக்கூடாது. முன்கோபடக்கூடாது, அவசரப்படக்கூடாது, நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. புது முயற்சிகள் வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும் கவலைப்பட வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத வேலை பளு அதிகரிக்கும். அடுத்தவர்களுடைய வேலை கூட உங்கள் தலை மீது விழும். கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாள் தான். இருந்தாலும் கவலை வேண்டாம் கடவுள் உங்களுக்கு பக்கத்துணையாக இருப்பார்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். லாபமான நாளாக இருக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும் கடன் சுமை குறையும்.
Previous Post Next Post


Put your ad code here