இன்றைய ராசிபலன் - 22.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. எதிரிகளாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் முழுசாக நம்பாதீங்க. முக்கியமான வேலைகளை நீங்களே நேரில் சென்று கவனிப்பது நல்லது. பண பரிவர்த்தனையை நாளை வைத்துக் கொள்ளுங்கள். புது முயற்சிகளையும் நாளை பார்த்துக் கொள்ளலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நல்லது நடக்கும் நாள். தெரிந்தவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் வீட்டில் மீண்டும் நடக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல செய்தி வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய முதலீடுகளை செய்யலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். சந்தோஷம் நிறைந்த நாள் இன்று.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ள மன தைரியம் தேவை. எந்த இடத்திலும் உடைந்து போகக்கூடாது. துவண்டு போகக்கூடாது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையில்லாத பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு நீங்கும். விலகிய சொந்த பந்தங்கள் தானாக வந்து உங்களுடன் சேருவார்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நிம்மதி கிடைக்கும். வேலையை பொருத்தவரை நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல நாள் தான். சுப காரிய வேலைகளை இன்று துவங்கலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். பணகஷ்டம் தீரும். நிதி நிலைமை சீராகும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். குறிப்பிட்டு நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலைகளை முடித்து விடுவீர்கள். நன்மை நடக்கும் நாள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை நிலவும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். மனதை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது நல்லது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை முன்கூட்டியே எடுத்து வையுங்கள். டென்ஷன் ஆக வேண்டாம். வாழ்க்கை துணையோடு சண்டை போட வேண்டாம். பிள்ளைகளுடைய நல்லதில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிரமமான நாளாக இருக்கும். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். பிரச்சனைகளிலிருந்து வெளிவர முடியாத சூழ்நிலை உண்டாகும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். அனாவசியமாக பேசக்கூடாது. கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம்.
Previous Post Next Post


Put your ad code here