செவ்வாய் உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டிசம்பர் வரை பண மழை கொட்டும்..!!!


நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் எதையும் துணிந்து செய்யக்கூடிய ஒரு தைரியசாலியாக இருப்பார். ரிஸ்க் எடுத்தாலும், அதில் நல்ல வெற்றியைக் காண்பார். இப்படிப்பட்ட செவ்வாய் தற்போது தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இதனால் ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.

அதோடு செவ்வாய் சில ராசிகளில் விபரீத ராஜயோகத்தையும் செவ்வாய் உருவாக்கியுள்ளார். இந்த செவ்வாயால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, நல்ல நிதி நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.

ஜோதிடத்தின் படி செவ்வாய் அக்டோபர் 27 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் டிசம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் டிசம்பர் வரை விபரீத ராஜயோகம் நீடித்திருக்கும். ஜோதிடத்தில் விபரீத ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் மாற்றங்களைக் கொண்டு வரும்.

குறிப்பாக இந்த ராஜயோகம் உருவானால், வெற்றிகள் குவியும், பண பிரச்சனைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், வெளிநாட்டு யோகம் தேடி வரும், கஷ்டங்கள் தீரும். இப்போது செவ்வாய் உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகத்தால் டிசம்பர் வரை அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.



மேஷம்

மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் வைக்கு வந்து சேரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் இருந்து நன்மைகள் கிடைக்கும். தைரியம், வலிமை போன்றவை அதிகரிக்கும். சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள் மற்றும் உங்களின் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராஜயோகம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குறிப்பாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்வில் உள்ள கஷ்டங்கள் குறையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் நடக்கிறது. அதே சமயம் சனி வக்ரமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறைந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Previous Post Next Post


Put your ad code here