கிளவுட்ஃப்ளேர் முடக்கம்: X மற்றும் ChatGPT பாதிப்பு..!!!


உலகளாவிய இணைய உட்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் (Cloudflare)-இல் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணையத்தின் சில பகுதிகள் முடங்கியுள்ளன.

சர்வதேச ஊடகங்கள் மற்றும் சேவை கண்காணிப்புத் தளங்களின் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

இதன் விளைவாக, X சமூக ஊடகம், லெட்டர்பொக்ஸ்ட் (Letterboxd) உள்ளிட்ட பல பிரபலமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டதோடு, கிளவுட்ஃப்ளேரின் சொந்த நிலைத் தகவல் பக்கமும் (status page) சில நேரம் செயலிழந்தது.

அத்துடன், கெண்வா (Canva), செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI)-இன் ChatGPT உள்ளிட்ட பல சேவைகளும் முடங்கின.

சண்டியாகோ (Santiago) தரவு மையத்தில் திட்டமிடப்பட்டிருந்த பராமரிப்புப் பணிகளே (scheduled maintenance) இந்தச் சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கிளவுட்ஃப்ளேர் நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன், நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், சிக்கலைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்தது.

சில பகுதிகளில் சேவைகள் சீரடையத் தொடங்கியிருந்தாலும், ஏனைய பகுதிகளில் முடக்கம் நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here