சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பு நிலவுவதால், கீரிமலைக் கட லில் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இறந்தவர்களுக்கான பிதிர்க்கடன்களை நிறைவேற்றச் செல்வோருக்குக் கடலில் நீராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் புனித தீர்த்தக் கேணியில் மட்டுமே கீரிமலைக்குச் செல்வோர் நீராடி வருகின்றனர். கீரிமலைக் கடல் தற்போது அதிக சீற்றத்துடன் காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.