மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் வரக்கூடிய நாளாக தான் இருக்கும். அதற்காக பயந்து விடக்கூடாது. மனதை தளர விடாமல் பிரச்சனைகள் வந்தாலும் சரி, எதிர்த்துப் போராடும் தைரியம் உங்களிடத்தில் இருந்தால், இன்றைய நாளை, இனிமையான நாளாக மாற்ற வேண்டும். உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கு. கொஞ்சம் போராடுங்கள் வெற்றி பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுத்த உடனேயே ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. அடுத்தவர்கள் போல வாழ வேண்டும் என்ற ஆசையும் இருக்கக் கூடாது. இறைவனின் மீது நம்பிக்கையை வைத்து கடமையில் சரியாக இருக்க வேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தலைகள் நீங்கும். கணவன் மனைவி பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். நீண்ட நாள் கனவு நினைவாகும். பயணங்கள் நல்லபடியாக அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்து கொடுத்துவிட்டு கடமையில் கண்ணும் கருத்துடன் இருப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனைகள் மேலோங்கும். ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டீங்க. எல்லா விஷயத்திற்கும் லாப நஷ்ட கணக்கு பார்ப்பீர்கள். இன்றைக்கு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் என்ன விஷயத்தை பேச வேண்டும் என்று, ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நேரம் காலம் இல்லாமல் உழைத்ததற்கு உண்டான நல்ல பலன் இன்று உங்கள் கையை வந்து சேரும். மன மகிழ்ச்சி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். நிதிநிலைமை மேலோங்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை இழப்பதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. உடனே பயந்து விடக்கூடாது. உங்களுக்கு தேவையான நல்ல விஷயத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள போராடத்தான் வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சுப செலவுகளாகத்தான் இருக்கும். பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவது, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, பரிசு பொருட்கள் வாங்குவது, இதுபோல செலவுகள் இன்று கொஞ்சம் அதிகரிக்கும். கவனமா இருங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. பின்னடைவான நாள் என்பதால், மனதிலும் உற்சாகம் இருக்காது. இறைவழிபாடு செய்யுங்கள். பிடித்த பாடல் இரண்டு கேட்டு விட்டு வேலையை துவங்குங்கள் நம்பிக்கையை கைவிடாதீர்கள்
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஜெயிக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளுடைய நலன், குடும்ப நலன், வீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்க என்ன சொன்னாலும் அதை எதிர்த்து பேச நாலு பேர் இருப்பார்கள். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. உங்கள் முடிவுக்கு ஆதரவு இருக்காது. இதுபோல பிரச்சனைகளை எதிர் கொண்டு போராடி, நீங்கள் ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டி இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளும்போது கவனம் இருக்கட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவை இல்லாத மன பயம் பதட்டம் இருக்கும். நாளைய பற்றிய கவலை அதிகமாக இருக்கும். டென்ஷன் நிறைந்த இந்த நாளை சுமூகமாக கொண்டு செல்ல வேண்டும் என்றால், தந்திரமாக சிந்தித்து தான் செயல்பட வேண்டும். சின்ன சின்ன பொய் சொல்லலாம் தவறு கிடையாது. கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கோங்க.
Tags:
Rasi Palan