மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட இருக்கக் கூடாது. இன்றைக்கான வேலையை நாளை தள்ளிப் போடவே கூடாது. அதிக நேரம் கைபேசி பார்க்காதீங்க. நேரத்தை வீணடிக்காதீங்க. பொறுப்போடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாளாக இருக்கும். பொறுப்புகளை கைநழுவ விட்டால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவனம் இருக்கட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான நல்ல காலம் பிறக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன மன பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது முழு நம்பிக்கை இருக்காது. இதனால் இன்று சின்ன தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள். தெரியாத வேலையில் காலை வைக்காதீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பேச்சுக்கு சபையில் மரியாதை இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்னதாக மந்தமான போக்கு நிலவும். நேரத்தை வீணடிக்காமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. இறை வழிபாடு செய்யுங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல பெயர் கிடைக்கும் நாள். பெயர் புகழ் பாராட்டுக்கு, உங்களுடைய பெயர் முதல் இடத்தை பிடிக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நீங்கள் நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் இனிதே அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். சில பேர் யாரையாவது நம்பி பணத்தை கொடுத்து ஏமாறவும் வாய்ப்புகள் உள்ளது. மலிவான விலையில் கிடைக்க கூடிய பொருட்களை நம்பி வாங்காதீங்க. கடன் கொடுக்கல் வாங்கலிலும் கவனம் இருக்கட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக சிந்திப்பீர்கள். எது உங்களுக்கு லாபம், எது உங்களுக்கு நஷ்டம் என்பதை எளிதில் தீர்மானம் செய்து விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையில்லாத விஷயத்தில் இருந்து தானாக ஒதுங்கி விடுவீர்கள். எதிரி தொல்லை நீங்கும். மன அமைதி கிடைக்கும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் சுகபோக வாழ்க்கை தான். செல்லும் இடமெல்லாம் நல்ல மரியாதை, நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். வேலையும் வியாபாரமும் முன்னேற்ற பாதையில் செல்லும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். பயணங்களால் மன நிறைவு உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு மன நிம்மதி அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் இருக்கட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். குடும்பத்தில் இருந்து வந்த மன கசப்பு நீங்கி சந்தோஷம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை கடமைகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் பல நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். செலவுக்கேற்ப பணம் கையில் இருக்கும். செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்வது நல்லது.
Tags:
Rasi Palan