இன்றைய ராசிபலன் - 05.02.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். உங்களுடைய சிந்தனை மேலோங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனதில் இருந்த கோபம் வண்ணம் எல்லாம் குறைந்து விடும். மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்து இருக்கும். தேவையற்ற சங்கடத்திலிருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் நினைத்த விஷயங்களை சாதிக்க வேண்டும் என்றால் அவசரம் வேண்டாம். நான்கு பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரி தொல்லை இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு சபையில் மரியாதை இருக்காது. இந்த நாள் பொறுமை காக்க வேண்டிய நாள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தைரியமாக செயல்படுவீர்கள். மனதில் நினைத்த குறிக்கோளை அடையாமல் ஓய மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். யாரிடத்தில் எல்லாம் கெட்ட பெயர் வாங்கினீர்களோ அவர்கள் வாயால் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து யோசனை செய்து கொண்டே இருப்பீர்கள். இதனால் உங்களுடைய அன்றாட வேலை கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. கவலைகளை மறந்து விடுங்கள். இறைவனின் மீது பாரத்தை போட்டு அன்றாட வேளையில் மட்டும் முழு கவனத்தோடு செயல்படுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு நினைத்த பிரமோஷன், எதிர்பார்த்த சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விநாயகரை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்பும் மரியாதையும் நல்ல உபச்சாரமும் கிடைக்கும். உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். புதிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிம்மதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. முக்கியமான வேலைகளை கூடுமானவரை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முடிப்பது நல்லது. கடைசி நிமிடம் வரை ஒரு வேலையை எடுத்துச் செல்ல வேண்டாம். யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட இருக்காது. பலநாள் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலியை கூட இன்று கையில் எடுக்கலாம். நிச்சயம் உங்களுக்கு சக்சஸ் உண்டு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்கட்டும். நண்பர்களோடு பழகும் போது கவனம் தேவை. மனதை அனாவசியமாக அலைபாய விடக்கூடாது. குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்கக் கூடாது.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். உங்களுக்கான கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் இனிதே நிறைவடையும். உங்களுடைய குடும்பத்தை கொஞ்சம் மிஸ் பண்ணுவீங்க. சில பேருக்கு வீட்டை விட்டு இரண்டு நாட்கள் வெளியில் தங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். மற்றபடி கடவுளின் ஆசிர்வாதத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here