மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல ஓய்வு கிடைக்கும் நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக நடக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் கடவுள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றான். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை எல்லாம் உங்களுடைய திறமையால் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல விஷயங்கள் கைகூடி வரும். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வேலைகளை முன்கூட்டியே முடித்து விடுங்கள். முக்கியமான வேலைகளை கடைசி சமயத்தில் அவசரப்பட்டு செய்யக்கூடாது. சோம்பேறித்தனம் வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். கடன் சுமை குறையும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. உற்சாகத்தோடு இருப்பீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை மேலோங்கும். மன நிம்மதி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நலமான சௌகரியமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இல்லை. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் நல்ல அனுபவத்தை கொடுக்கும். பயணங்களின் போது சின்ன சின்ன இடர்பாடுகள் வரலாம். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்கள் பேச்சுக்கு உங்களை சுற்றி இருப்பவர்களே ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். இதனால் மனது சங்கடப்படும். உறவுகளுக்குள் மனக்கசப்பு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்படுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமை செயல்படுவீர்கள். வியாபாரத்தில் தடையாக இருந்த விஷயங்கள் சரியாகும். உங்களுடைய விடாமுயற்சிக்கு நிச்சயம் நல்லதொரு வெற்றி கிடைக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனம் தேவை. தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளவும். மீட்டிங்கு போக போறீங்க, அல்லது வேறு ஏதாவது முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திட போறீங்கன்னா கவனமாக இருந்து கொள்ளவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன ஏமாற்றங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பெரிய அளவில் எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம். உங்களுடைய கடமைகளை சரியாக செய்தாலே, அதற்கான பலன் கிடைத்துவிடும். அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றத்தை தரும். அதிக ஏமாற்றம் மன உளைச்சலை கொடுத்து விடும், ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அசதியான நாளாக இருக்கும். உடல் சோர்வு காணப்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. தேவையற்ற அலைச்சலை தவிர்க்க நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்கவும். அதிகமான வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வயதில் முதியவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
Tags:
Rasi Palan