
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தனம், தானியம், சந்தோஷம், வரவு, நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மங்களகரமான காரியங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூலாகும். தெளிவாக சிந்திப்பீர்கள். புதிய முதலீடுகளை செய்யலாம். நிறைய லாபகரமான விஷயங்கள் இன்று நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்களை மீண்டும் பேச துவங்குவீர்கள். இந்த நாள் இனிதாக நிறைவடையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் கோபமான நாளாக இருக்கப் போகிறது. டென்ஷன் அசதி, வேலைபளு எல்லாமே அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய திறன் உங்களிடத்தில் இருக்கிறது. பொறுமையாக அந்த திறமையை வெளிக்காட்டுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காமல் முதலில் வேலையையும் கடமையையும் முடித்துவிட்டு, பிறகு தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இறைவனோடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். செய்யும் வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் இருக்கும் துறையில் உங்களுடைய திறமை வெளிப்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்திலிருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். நீங்கள் செய்யும் முயற்சிகள் முழு வெற்றியை கொடுக்கும். இறைவழிபாடும் மனதிற்கு அமைதியை தரும்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிம்மதி இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். உங்களுடைய அனுபவங்களை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வீர்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையிலும் விளக்கு ஏற்றி வைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இந்த நாள் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாளாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைய நல்ல காரியங்களை செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கடன் சுமைக் குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க்கவும் வாய்ப்பு உள்ளது. குடும்ப ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கொஞ்சம் சோம்பேறித்தனமான, சோர்வான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்ற எண்ணம் வரும். இருந்தாலும் அன்றாட வேலையில் மிச்சம் வைக்காதீங்க. இன்றைக்கான வேலையை, நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மன சஞ்சலம் நிறைந்த நாளாக இருக்கும். பழைய விஷயங்கள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு செய்யக்கூடிய வேலையை, செய்ய விடாமல் தடுக்கும். ஆகவே சிந்தனையை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கடமையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருப்பீர்கள். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து விடுவீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். எதிரி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். நல்ல பக்குவம் கிடைக்கும் நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் நல்ல நாளாக, அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
Tags:
Rasi Palan