வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: QR எரிபொருள் ஒதுக்கீடு அதிரடியாக அதிகரிப்பு..!!!


QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகன வகைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வாகன வகைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வந்த எரிபொருள் அளவில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சிற்றூந்துகளுக்கான (Car) ஒதுக்கீடு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றராகவும், சிற்றூர்திகளுக்கான (Van) ஒதுக்கீடு 40 லீற்றரிலிருந்து 50 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேருந்துகளுக்கான (Bus) எரிபொருள் ஒதுக்கீடு 60 லீற்றரிலிருந்து 100 லீற்றராகவும், முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு 15 லீற்றரிலிருந்து 20 லீற்றராகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உந்துருளிகள் (Bike) மற்றும் குவாட்ரிசைக்கிள் (Quadricycle) ஆகியவற்றுக்குத் தலா 8 லீற்றர் எரிபொருள் இனி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணியுடன் தொடர்புடைய வாகனங்களுக்கான (Land Vehicle) ஒதுக்கீடு 25 லீற்றரிலிருந்து 40 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாரவூர்தி (200 லீற்றர்) மற்றும் விசேட தேவைக்கான வாகனங்களுக்கு (40 லீற்றர்) வழங்கப்பட்டு வந்த பழைய ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்ந்தும் அதே அளவு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here