மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். வருமானம் பெருகும். சேமிப்பை உயர்த்துவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து, மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான முன்னுரிமை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். இன்று தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான ஆக்கப்பூர்வமான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளுடைய கல்வியில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இயலாதவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவமும் இன்று வெளிப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று திறமைசாலியாக வளம் வரப்போகிறீர்கள். உங்களுடைய திறமையை பார்த்து சுற்றி இருப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு இன்று தேர்ச்சி பெறக்கூடிய நாளாக அமையும். எதிர்பார்க்காத நல்லது உங்களை தேடி வரும். வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தினால் நிச்சயம் வாழ்வில் வெற்றி அடையலாம்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்து வாழ்வதால் ஏற்படும் சுகம், உங்கள் மனதை அமைதிப்படுத்தும். புது அனுபவங்கள் இன்று உங்களுக்கு மன நிம்மதியை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று அளவில்லா நன்மைகள் நடக்கும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களோடு உஷாராக பழக வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். உங்களுடைய கடமைகளை நீங்களே செய்யுங்கள். அடுத்தவர்கள் கையில் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம், ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். பிரச்சனைகளை கண்டு பயந்து உட்கார மாட்டீர்கள். எதுவாக இருந்தாலும் பிரச்சனைக்கு உண்டான தீர்வை, கடவுளின் கையில் கொடுத்துவிட்டு உங்களுடைய கடமையில் மட்டும், கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். இந்த நாள் நல்ல அனுபவங்களை கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பேசிப்பேசியே அந்த பிரச்சினையை சரி செய்து விடுவீர்கள். உங்களுடைய பேச்சை மீறுவதற்கு இன்று, ஒரு ஆள் கூட, உங்கள் எதிரே நிற்கவே முடியாது. அந்த அளவிற்கு வார்த்தைகளில் தெளிவு இருக்கும். உங்கள் பக்கம் நியாயமும் இருக்கும். பட்டிமன்ற பேச்சாளர்கள் கலைஞர்கள் இவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். சேமிப்பை உயர்த்தலாம். ஷேர் மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கு இன்று நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை சரியாகும். நிதி நிலைமை சீராகும். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், உங்களுடைய தேவையற்ற பேச்சுகளால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பேச்சை குறைப்பது நல்லது.
Tags:
Rasi Palan