மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக ஒரு வேலையை கையில் எடுக்காதீங்க. அடுத்தவர்களை நம்பி உங்களுடைய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய வேலைகளை நீங்களே கவனித்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் உயரும். வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும். உங்களுடைய நிம்மதிக்கு எந்த பிரச்சனையும் வராது. வீட்டுக்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தங்கம் சேரும் யோகமும் உங்களுக்கு இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். திறமை வெளிப்படும். உங்களுடைய முன்னேற்றத்தை கண்டு உங்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவிற்கு நல்லதொரு துவக்கம் இன்று இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. தொலைபேசியின் மூலமாகவோ அல்லது மெசேஜின் மூலமாகவோ உங்களுடைய காதுகள் நிச்சயம் இன்று குளிரும். நீண்ட தூர பயணங்களின் மூலம் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான உதவி, தேவையான நேரத்தில் கிடைக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களுடைய ஒத்துழைப்பு இன்று உங்களுக்கு அதிகமாக இருக்கும். மனிதர்களுடைய அருமை பெருமைகளை புரிந்து கொள்ளக்கூடிய நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை கரம் பிடிக்க வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். மனதிற்கு பிடித்த நபரிடமிருந்து, மனதிற்கு பிடித்த பரிசு கிடைக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டு. மகிழ்ச்சி வானளவு உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது நடக்கும். பெயரும் பாராட்டும் புகழும் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமையும் பேச்சாற்றலும் வெளிப்படும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் ஓடிவிடும். வேலை பளு அதிகமாக இருக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சில் தெளிவு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சந்தோஷம் இரட்டிப்பாகும்.
Tags:
Rasi Palan