இன்றைய ராசிபலன் - 01.06.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லது நடக்கும். காரிய தடை விலகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான மீட்டிங் அப்பாயிண்ட்மெண்ட் ஏதாவது இருந்தால், முன்கூட்டியே அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாளில் சோம்பேறித்தனத்தை விட்டு வெகு தூரம் தள்ளி இருங்கள். நல்லதே நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். மனப்பக்குவம் கிடைக்கும் நாள். புது அனுபவங்கள் கிடைக்கும் நாள். இறை வழிபாடு செய்வது உங்கள் மனதை இன்னும் தெளிவு செய்யும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். தேவையில்லாத சிந்தனையால் அன்றாட வேலைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற சிந்தனையை குறைத்துக் கொள்ளுங்கள். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கிறது. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். முன்கோபம் வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபாடு இருக்கும். நேர்த்திக்கடனை நிறைவேற்ற உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை அதிகமாக இருக்கும். சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும், சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று, சில பேர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். ஆனால் அரசுக்கு புறமான காரியத்தில் ஈடுபடக்கூடாது. குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்கக்கூடாது. என்ன நடந்தாலும் நேர்மையாக இருங்கள் நல்லதே நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிம்மதியாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். வீண் விரைய செலவுகள் குறையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல் சரியாகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். கொடுத்த வாக்கை சரியாக நிறைவேற்றுவீர்கள். வீண் விரைய செலவுகள் குறையும். வருமானம் பெருகும். சேமிப்பும் இரட்டிப்பாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களுடைய திறமையை நிரூபிக்க கூடிய வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மைகள் உண்டு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று காரியத்தில் கண்ணும் கருத்தும் போது நடந்து கொள்வீர்கள். பொறுமையாக இருப்பீர்கள். வேகத்தை விட விவேகம் அதிகமாக இருக்கும். பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உங்களுடைய திறமை வெளிப்படும் நாள். இன்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை வியாபாரம் எல்லாம் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்யும். பெரிசாக அலைச்சல் இருக்காது. தேவையான சாப்பாடு, தேவையான ஓய்வு, என்று இந்த நாள் சௌகரியம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here