மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். இறக்க குணம் வெளிப்படும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பகை விலகும். மனதில் தேக்கி வைத்திருந்த பாரம் எல்லாம் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். சிக்கல்களுக்கு உண்டான தீர்வை இறைவன் கண் முன்னே காண்பித்துக் கொடுப்பான். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். இந்த நாள் இறுதியில் பெரிய அளவில் வந்த பிரச்சனைகள் கூட, இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட தூர பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டு.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். அதேசமயம் தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய வேலையில் கவனமாக இருந்தால், உங்களை மிஞ்ச யாரும் குறுக்கே வர முடியாது. மனதை தேவையில்லாமல் அலைபாய விடாதீங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு பாசம் காதல் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கெட்ட பெயர் விலகும். கடன் சுமை குறையும். சேமிப்பு அதிகரிக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேகத்தோடு சேர்ந்த விவேகம் உங்களை வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். நண்பர்கள் உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பக்குவமாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். மன தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். புது வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மனம் தடுமாறும். மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக அடுத்தவர்கள் மீது சந்தேகப்பட வேண்டாம். எது நல்லது, எது கெட்டது என்று ஆராய தெரியவில்லை என்றால், நிதானமாக இருங்கள். உடனடியாக எந்த ஒரு முடிவையும் தவறாக எடுக்காதீர்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல நேரம் கை கூடி வரும். நீண்ட நாட்களாக நடத்த முடியாத நல்ல காரியங்களை இனி வரக்கூடிய நாட்களில் நடத்தலாம். அதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகி, முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாள். பெருமையாக தலை நிமிர்ந்து, கர்வத்தோடு நடக்கக்கூடிய நாள். எதிரிகளை எல்லாம் வீழ்த்துவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி ஏற்க காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். இருந்தாலும் உங்களுடைய அனாவசிய செலவு குறைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.
Tags:
Rasi Palan