இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

6 நோயாளர்கள் நேற்று (17) அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்று குணமடைந்த நிலையில் , நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here