இலங்கையில் 1524 ஆக கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு


கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் இன்று ( 28) வியாழக்கிழமை அடையாளம் இரவு காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அவர்களில் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கடற்படையினர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 524ஆக  அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 55 பேரில் 21 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களும் 34 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை 745 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

769 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');