நாடளாவிய ரீதியில் நாளை (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை ஜூன் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூன் 01 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜூன் 06 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு , கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news