யாழ்ப்பாணம் - வலி.வடக்கு மாவை கலட்டியில் சருகுப்புலியின் வேட்டையில் இரையாகி 9 ஆடுகள் உயிரிழந்துள்ளன என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த செல்வகாந்தன் பாமினி என்பவருடைய குடும்பத்தின் வாழ்வாதாரமான ஆடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
மாவை கலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சருகுப்புலி அங்கு கட்டப்பட்டிருந்த 14 ஆடுகளை கடித்துக் குதறியுள்ளது. அவற்றில் 9 ஆடுகள் உயிரிழந்த்துடன் 5 ஆடுகள் காயமடைந்துள்ளன.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்றபடமை குறிப்பிடத்தக்கது