கதிர்காமம் ஆடி வேல் விழாவில் பொது மக்களுக்கு தடை..!!!


கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழா இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கொவிட்-19 ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கி சுகாதாரப் பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி இம்முறை கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆடி வேல் விழாவில் பெரஹர நடைபெறும் முழுமையான கால எல்லை மக்களுக்கு பார்வையிடுவதற்கோ கலந்துகொள்வதற்கோ சந்தர்ப்பம் கிடைக்காது. அதே போன்று வடக்கு கிழக்கிலிருந்து உகந்தை, குமண - யால வனத்தினூடாக கதிர்காமம் புனித பூமிக்கு பாத யாத்திரையாக செல்வோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட மாட்டாது என்றும் இதில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கதிர்காமத்திற்கு பொது மக்கள் வருவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை செயலாளர் அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here