யாழ் பேருந்து நிலையத்தில் 3 இளைஞர்கள் கைது..!!!


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் இன்று மாலை ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மூன்று இளைஞர்களை நடமாடியுள்னர்.இதன் போது பொலிஸார் விசாரனை செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.
இதனால் குறித்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பரந்தன் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here