கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான பனாமா நாட்டுக்குச் சொந்தமான எம்.ரி- நிவ் டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் பற்றி எரிந்த தீயானது இலங்கை, இந்திய கடற்படையினரின் கூட்டு முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இக்கப்பலானது ஏ.ஏ.எல்.பி. விங்கர் இழுவை படகு மூலம் கிழக்கு கடற்பரப்பில் 40 கடல் மைல்கள் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. கப்பலிலுள்ள மசகு எண்ணெய்யை கொண்டுசெல்லும் விதத்தில் அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
தீயை அணைக்கும் முயற்சிகள் நாள் முழுவதும் தளத்தில் நடந்து வருகின்றன. ஆழ்கடலில் கடும் காற்று காரணமாக அவ்வப்போது தீ பரவும் அபாயம் உள்ளது. இதுபோன்ற எதிர்பாராத தீ பரவலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் அந்த இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்புக்கு ஹெலிக்கொப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது 03 (capital ships) கெப்பிடல் கப்பல்கள், 03 இலங்கை கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல்கள், இலங்கை கரையோர பாதுகாப்புச் செயலணியின் 02 கப்பல்கள், இந்திய கடலோர பாதுகாப்புச் செயலணியின் 02 கப்பல்கள், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பல் மற்றும் 02 இழுவைப்படகுகளும் (Tug Boats) நிறுத்தப்பட்டுள்ளன.
ஏ.எல்.பி விங்கர் (ALP Winger tug) இழுவைப்படகு, டி.டி.டி தீயணைப்பு உபகரணங்களுடனான கப்பல் TTT ONE (Fire Fighting Vessel) அங்கு உள்ளதுடன், தீயணைப்பு நிபுணர்களுடன் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், இங்கு கூட்டு நடவடிக்கைக்காக விமானப் படைக்குச் சொந்தமான ஏ.எம்.ஐ 17 ஹெலிக்கொப்டர் செயற்படுகிறது.
மேலும், இந்திய கரையோர பாதுகாப்பு படைக்குச் சொந்தமான இரண்டு டோனியர் விமானங்களும் அவசரகால பயன்பாட்டிற்காக மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
பேரிடர் சலுகைகளை வழங்க விசேட ஐ.எஸ்.ஈ நிபுணத்துவம் கொண்ட சர்வதேச தனியார் நிறுவனத்தை கப்பலின் உரிமையாளர் நியமித்துள்ளார். இந் நிறுவனம் இலங்கை மற்றும் இந்திய செயலணிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கையில் குளிரூட்டும் செயற்பாடு மூலம் மசகு எண்ணெய் இருக்கும் இடத்திற்கும் தீ பரவல் இடத்திற்கும் இடையில் தொடர்ந்தும் தீ பரவாமலிருப்பதற்கானம் செயற்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மசகு எண்ணெய்க் கசிவுக்கான வாய்ப்புகள் இல்லையென்றும் கடன்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.