இரு துண்டுகளான கையை பொருத்தி யாழ்.வைத்தியர்கள் சாதனை..!!!


யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு,  அதனை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சையை, ஒருவர்க்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று,  கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வட.மாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில், கடந்த 23ஆம் திகதியன்று, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபருக்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு, மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன், பொதுமக்கள் கைகள், கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும். மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here