Tuesday 20 October 2020

இன்றைய ராசிபலன் - 20.10.2020..!!!

SHARE


மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.


ரிஷபம்

ரிஷபம்: உற்சாகமாக எதையும் செய்து முன்னேறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.


மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரங்கள் மற்றும் வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சிலசூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


சிம்மம்

சிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்றநிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.


துலாம்

துலாம்: கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுங்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க பாருங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மகரம்

மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விருத்தினர் வருகை உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.


கும்பம்

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மீனம்

மீனம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

SHARE