மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தொழிற்சாலையில் பணியாற்றிய 321 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்தவர்.
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கோரோனா தொற்றுக்கு உள்ளாகியமை நேற்றுமுன்தினம. ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டதை அடுத்து அந்தப் பெண்ணின் தொழிற்சாலை பணியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.